Thursday, December 4, 2014

Kingdom vision

                            THE KINGDOM OF GOD IS OUR VISION
OUR VISION IS THE KINGDOM OF GOD  IN  THIS  WORLD.
THE KINGDOM OF GOD IN EVERY HEART AND HOME.

தேவனுடைய ராஜ்யமே நமது தரிசனம். (மத்தேயு 6:10)
இயேசுவின் நாமத்தினால் பிசாசுகளை துரத்தும் போது தேவ  ராஜ்யம் அங்கே வருகிறது. 
இயேசுவின் வார்த்தையினால் நோய்கள் சுகமாகும் போது தேவ ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுகிறது.
நற்செய்தி பிரசங்கிக்கப்படும் போது அதை விசுவாசித்து பாவிகள் மனம்திரும்பும் போது தேவ ராஜ்யம் விரிவடைகிறது. 
(மத்தேயு10:7,8; 12:28, 22:10)

தேவ ராஜ்யம் இந்த பூமியில் நிறுவப்படும் போது

1. தேவனுடைய பூரண ஆளுகை: பூமி தேவனை அறிகிற அறிவினால் நிறைநதிருக்கும். ஆபகூக் 2:14, ஏசாயா 11:9 

2. சமுதாய வாழ்வு:  அன்பு, சந்தோஷம், சமாதானம், நீதி, பரிசுத்தம்,  நிறைந்திருக்கும். தீங்கு செய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை ஏசாயா 11:9

3. ஆவிக்குரிய வாழ்வு: தினமும் தேவனுக்கு துதி ஆராதனை செலுத்தப்படும். வாரந்தோறும் கர்த்தருக்கு பண்டிகை ஆசரிக்கப்படும். உபவாச ஜெபங்கள், வேதபாடங்கள், ஐக்கிய விருந்துக்கள், முகாம்கள் நிறைய நடைபெறும். நெகேமியா 8 : 18, எஸ்றா 3 : 5
அதற்குப்பின்பு நித்தமும், மாதப்பிறப்புகளிலும், கர்த்தருடைய சகல பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும், கர்த்தருக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள்.
சகரியா 14 : 16
பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.

4. குடும்ப ஆசீர்வாதம்:  குடும்பங்கள், கூட்டு குடும்பங்களாய் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கும்.
மீகா 4 : 4 , I இராஜாக்கள்  4 : 25
அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.

5. இயற்கை சுற்று சூழல்: சீதோஷனம் மிக அழகாக எழில் நிறைந்திருக்கும்.
ஏசாயா 55 : 12
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
ஏசாயா  60 : 17
நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும், வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.
ஏசாயா 41 : 19, எசேக் 36 : 35
பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.

நாம் செய்ய வேண்டியது?

1. தேவனுடைய நாமம் மகிமைப்படவும்,  தேவ ராஜ்யம் நிறுவப்படவும்,  தேவ சித்தம் இந்த பூமியில் பூரணமாய் செய்யப்படவும் ஜெபிக்க வேண்டும். எசேக் 36:37, மத்தேயு 6:10

2. தேவன் தந்திருக்கிற வரங்களை பயன்படுத்தி சுவிசேஷம் அறிவிக்க வேண்டும்.
மாற்கு 16:15 

3. வேத்தை கற்றுக்கொடுத்து உப்பாக, வெளிச்சமாக,  சாட்சியாக,  ஆசீர்வாதமான  சீஷர்களை உருவாக்க வேண்டும். மத்தேயு 28:18-20

4. ராஜ்யத்தின் தரிசனத்தை செயல்படுத்துகிற சபைகள் நாட்டப்பட வேண்டும். மத்தேயு16:18

5. ராஜ்யத்தின் தரிசனத்தை உலகத்தின் கடைசி பரியந்தம் சுமந்து செல்லும் மிஷனெரிகள் சபைகளில் இருந்து அனுப்பப்பட வேண்டும்.  அப் 1:8

6. நம்முடைய ஜெபம், பொருளாதாரம், பிரயாசம்  எல்லாம் தேவனுடைய ராஜ்யத்தின் வரிவாக்கத்திற்காகவே செலவிடப்படட்டும்.  நமது முழு இருதயத்தோடும், முழு மனதுடனும், முழு பெலத்துடனும் தேவனிடத்தில் அன்புகூருவோமாக,  இயேசுவை அறிவிப்போமாக, தேவ ராஜ்யத்திற்காக உழைப்போமாக.  மத் 6:33, 22:37-39


தேவனுடைய  ராஜ்யமே நமது தரிசனம்    நமது தரிசனமே தேவனுடைய ராஜ்யம்
                 நமது தரிசனம் தேவனுடைய ராஜ்யம்

முழு உலகத்திலும் தேவ ராஜ்யம் என்பது நமது தரிசனமாக இருந்தாலும், நம்மை தேவன் வைத்திருக்கின்ற இடத்திலிருந்து செய்யக்கூடியதை முழு பெலத்தோடு செய்ய துவங்க வேண்டும். 
தேவனுடைய ராஜ்யம் சீராக வளர்ந்து பெருக்கூடிய ஓன்று. ஒரு விதை முளைத்து பெரிய மரமாவது போலவும், கொஞ்சம் புளித்த மாவு முழு மாவையும் புளிக்க பண்ணுவது போலவும் நடைபெறுகின்ற நீண்ட கால தொடர் நிகழ்வாகும். 
தேவ ராஜ்யத்தை கானும் வரை தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்க வேண்டும்

1. ஜெபம்.
2. நற்செய்தி பணி.
3. விசுவாசிகளை சீஷர்களாக உருவாக்க வேண்டும்.
4. அந்தந்த இடங்களில்  சீஷத்துவ குழுக்களை உண்டாக்க வேண்டும். வீட்டு சபைகள் நிறுவப்பட வேண்டும்.
5. அறிவிக்கப்படாத இடங்களில் அறிவிக்கப்பட ஊழியர்களை உருவாக்கி, அனுப்பப்பட வேண்டும். (மிஷன்)

அகில உலகத்திலும் திருச்சபைகளில் நடைபெறுகின்ற ஊழிய நிகழ்ச்சிகள், வரங்கள்,  பொருளாதாரம், நேரம், ஆதாரங்கள், அனுபவங்கள்,  நடைமுறைகள், வழிமுறைகள், பயிற்சிகள், அனுகுமுறைகள் ஆகியவற்றை அகில உலக அளவில் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள ஆவன செய்ய வேண்டும். 


நமது திருச்சபைகளில் காணப்பட வேண்டிய பண்புகள்:

1. மற்ற பரிசுத்தவான்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்க வேண்டும்.
2. ஒருவருக்கொருவர் மேலே கண்ட பத்து விசயங்களை பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரத்தை பரவலாக்க வேண்டும். 
3. எல்லாவற்றையும் நேர்மறை எண்ணங்களோடு ஆராய்ந்து பார்க்கும் ஆற்றலை வளர்க்க வேண்டும். 
4. சிறந்த செயல்முறையை பயன்படுத்தி ராஜ்யத்தை விரிவுபடுத்த அக்கறை காண்பிக்க வேண்டும். 
5. ஒற்றுமை, ஒருமனம், ஒத்துழைப்பை ஒருங்கினைத்து, பெரும் குழு (BIG TEAM ATTITUDE) மனப்பான்மையுடன் கடினமாக ராஜ்யத்திற்காக பிரயாசப்பட ஊக்குவிக்கப்பட வேண்டும். 
     நமது தரிசனம் தேவனுடைய ராஜ்யம்

I am committed to contribute and cooperate to glorify the name of God by  bring the Kingdom of God by fulfilling the will of God. 

இந்த பூமியில் தேவனுடைய ராஜ்யம் வரும்படியாக தேவனுடைய சித்தம் நிறைவேற்றி தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த என்னுடைய பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் அர்ப்பனிக்கின்றேன்

இந்த பூமியில் தேவனுடைய ராஜ்யம் வரும்படியாக தேவனுடைய சித்தம் நிறைவேற்றி தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவதே நமது தரிசனம்.

Our vision is to glorify the name of God by  bring the Kingdom of God by fulfilling the will of God