Saturday, June 23, 2012

wait on the lord

  1. காத்திருக்குதல்- குறிப்பிட்ட நேரத்திற்காக காத்திருக்குதல்
  2. எதிர்பார்த்திருத்தல் - குறிப்பிட்ட சம்பவம் நிகழ்வதற்காக காத்திருத்தல், பட்டமளிப்புக்காக
  3. நம்பிக்கையாயிருத்தல் - குறிப்பிட்ட முறையில் தான் சம்பவிக்கும் என்ற அறிவு. இப்படித்தான்                   சம்பவிக்கும் என்ற அறிவும் நம்பிக்கையும்,
  4. ஆயத்தமாயிருத்தல் - செய்ய வேண்டியதை செய்து முடித்தல், தவிர்க்க வேண்டியவற்றை கட்டயமாக தவிர்த்தல், நமக்கு சம்பவிக்கும் எந்த நிகழ்வானாலும் அதில் நாம் எதற்கு காத்திருக்கிறோமோ அதுவே தீர்மானம் செய்ய உதவும். தேவனுக்கு காத்திருந்தால். என்ன சம்பவித்தாலும் அது தடைக்கல் அல்ல படிக்கல், சாபமல்ல ஆசீர்வாதம். தீமைக்கல்ல நன்மைக்காகவே நடக்கும், உடைக்க அல்ல நம்மை உருவாக்கும், குழப்ப அல்ல சமாதானத்திற்கே வழிவகுக்கும்,  சிதறிடிக்க அல்ல கூட்டிச்சேர்க்கவே நிகழும், தோல்விக்கு அல்ல வெற்றிக்கே வழிநடத்தும். நாம் எதற்கு காத்திருக்கிறோமோ அதற்கே ஆயத்தப்படுவோம், சம்பவங்களால் இடறிபோக வேண்டாம்.
  5. காத்திருககுதல் - ஆலோசனை பெற, பெலப்பட, கற்றுக்கொள்ள, என்ன செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும். எப்போது செய்ய வேண்டும், எங்கு செய்ய வேண்டும். யாரோடு செய்ய வேண்டும் என அறிந்து கொள்ள காத்திருககுதல். 
  6. ஆவலாய் இருத்தல் - ஒரு செயலை செய்ய, ஒன்றை பெற சரியான தருனத்திற்காக காத்திருக்குதல்.
  7. அமைதியாயிருத்தல் - தேவன் செயல்படும்வரை பொறுமையாயிருத்தல்
  8. எதிர்பார்த்திருத்தல் - தேவனின் நேரத்திற்காக. அவருடைய அசைவுக்காக. அவருடைய சமிக்கைக்காக, சிக்கனலுக்காக காத்திருத்தல்.
  9. திருப்தியாயிருத்தல் - அவர் எனக்கு தேவையானதை சரியான நேரத்தில் தருவார், நான் அவசர பட மாட்டேன். எந்த நிலையில் இருந்தாலும் முறுமுறுக்க மாட்டேன். மனரம்மியமாய் இருப்பேன்.
  10. தொடர்ந்து நிலைத்திருப்பேன் - எனக்கு கொடுத்த பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். அந்நாள்வரை பாதுகாத்துக் கொள்வேன். பராமரித்து வருவேன்.
காத்திருப்பதற்கு அடையாளம்:
தீர்க்கதரிசி சிமியோன் லூக்கா 2-25 ஒவ்வொரு குழந்தையாக பார்த்துக் கொண்டே இருந்தான்.
யோவான் ஸ்நானகன் யோவான் 1:33 ஞானஸ்நானம் எடுக்கிற ஒவ்வொருவரையும் உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அடையாளம் கண்டனர். அறிமுகம் செய்தனர்.
லூக்கா 12:31-48
தேவனுடைய ராஜ்யத்திற்காக காத்திருங்கள். தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள். அவர் உங்களுக்கு ராஜ்யத்தை கொடுப்பார். யாருக்கென்றால் அவருக்கு காத்திருப்போருக்கு, ஆயத்தமாயிருப்போருக்கு, அவர் சொன்ன வேலையை செய்து முடித்தவருக்கு, மற்றவர்களுக்கு சேவை செய்தவர்களுக்கு. வஸ்திரத்தை காத்துக் கொண்டு. விளக்குகள் எப்போது எரிய தேவையான எண்னை உடையவர்களாகவும். விழித்திருக்கிறவர்களாகவும் இருக்கிறவர்கள் பாக்கியவான்கள். காத்திராமல். ஆயத்த்மாயிராமல். சொன்ன வேலையை செய்யாதிருந்தால் அடிக்கப்படுவான்.

இன்று நாம் காத்திருக்க தீர்மானிப்போம். ஆயத்தப்படுவோம். ஆயத்தப்படுத்துவோம். ராஜா வருகிறார்.